அவன் - அவள் - பாகம் 6

இது வேற அவன் .. வேற அவள் ... ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர புடிச்சிருக்கு .. ஆனா சொல்லிக்க தான் ஈகோ .. !! (அதாங்க... அதே அகம் புடிச்ச கழதை தான்...:))

அவளுக்கு பைய்யன் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க .. அவனுக்கு வயத்துல புளிய கரைக்க ஆரம்பிச்சிருச்சு .. இனி ..

'ஆப்'ஈஸ் communicatorla...

அவன் :- ஹே, என்ன ரெண்டு நாலா ஆளையே காணோம் ?
அவள் :- அத்தை வீட்டுக்கு போயிட்டுவந்தேன் ..
அவன் :- ஹ்ம்ம்ம்.. உனக்கு அத்தை பைய்யன் யாரவது இருக்கானா ?
அவள் :- எதுக்கு கேக்கற .. ?
அவன் :- சும்மா ஒரு பொது அறிவுக்காக ...
அவள் :- அதெல்லாம் ஒன்னும் இல்ல...
அவன் :- சேரி.. வீட்ல உனக்கு பைய்யன் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களா ?
அவள் :- இப்போ எதுக்கு நீ துருவி துருவி கேள்வி கேக்கற ?
அவன் :- இல்ல சும்மா தான் கேக்கறேன்...
அவள் :- யாரோ ரொம்ப வேண்டிக்கறாங்க போல...
அவன் :- எதுக்கு ?
அவள் :- எனக்கு கல்யாணம் ஆக கூடாதுன்னு ...
அவன் :- ச ச .. அப்டி எல்லாம் நா நெனைக்க மாட்டேன் ....
அவள் :- அட பாவி ...
அவன் :- சாரி சாரி...
அவள் :- என்னடா சாரி ?
அவன் :-நான் தான் உனக்கு சீக்கரமே அடிமை சிக்க கூடாதுன்னு வேண்டிகிட்டு இருக்கேன் ...
அவள் :- என் டா உனக்கு இந்த நல்ல எண்ணம் ?
அவன் :- சும்மா தான்..
அவள் :- பொய் சொல்லாம சொல்லு ...
அவன் :- உனக்கு தெரியவே தெரியாது பாரு ?
அவள் :- உன் வாய தெறந்து நீ தான் சொல்லேன்..
அவன்:- சேரி.. நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசை படறேன்..
அவள் :- இத சொல்ல இவ்ளோ நாளா ?
அவன் :- அப்போ உனக்கு ஓகே வா ?
அவள் :- ஹ்ம்ம்ம்...
அவன் :- ஹே... நெஜமாவ சொல்ற..
அவள் :- இல்ல.. எனக்கு போர் அடிக்குது ...டைம் பாஸ் பண்ண ஒரு அடிமை தேவை பட்டது .. நீ தான் சிக்கின ...
அவன் :- !!!???!!!

Saturday, May 15, 2010 by Hari
Categories: , | Leave a comment

Leave a Reply