அவன் - அவள் - பாகம் 7

Context :- அவன் and அவள் have been married for a couple of years and are getting ready for a dinner given by a colleague.

அவள் :-ஹே இந்த டிரஸ் எப்டி இறுக்கு ?
அவன் :- (பாற்காமல்) ஹ்ம்ம்.. நல்லா தான் இறுக்கு ... இப்போ எதுக்கு என் கிட்ட விமர்சனம் கேக்கற ?
அவள் :- ஒரு நிமிஷம் என்ன பார்த்து தான் சொல்லுங்களேன் ...
அவன் :- (இப்போவும் பாற்காமல்) நீ எது கட்டினாலும் நல்லா தாண்டி இருக்கும் ..
அவள் :- போதும் போதும்.. கொஞ்சம் இங்க பார்த்து சொல்லுங்க..
அவன் :- சூப்பரா இறுக்கு ... நீ இந்த புடவையில அழகா தெரியிரியா இல்ல உன்னால இந்த புடவைக்கு அழகானு தெரியலயேமா... தெரியலியே...
அவள் :- இந்த சினிமா Dialogueக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.. கொஞ்சம் நல்லா பார்த்து சொல்லுங்க ..
அவன் :- நல்லா இறுக்கு... ஆனா நீ இத ஏற்கனவே நம்ம ராஜேஷ் Receptionக்கு கட்டிகல?
அவள் :- அட ஆமா.... தேங்க்ஸ். நா பொய் மாத்திகிட்டு வந்திடறேன்...

(After 20 minutes )

அவன் :- மேடம், போலாமா ? இப்போவே ரோட்ல டிராபிக் எக்கச்சக்கமா இறுக்கும்
அவள் :- ஹ்ம்ம்.. வந்துட்டேன்... சேரி.. நான் உங்கள ஒன்னும் கேக்கனும்னு நெனச்சிட்டு இருந்தேன் ..
அவன் :- (செம்ம Alert) என்னது ?
அவள் :- அத எப்டி கரெக்டா ராஜேஷ் Receptionக்கு தான் அந்த புடவைய கட்டிநேனு கரெக்டா சொன்னீங்க ?
அவன் :- ஏற்.... ஹ்ம்ம்... இல்ல டா... எனக்கு மெமரி பவர் ஜாஸ்தி டா.. அதான் கரெக்டா ஞாபகம் இருந்தது .. நீ வேற அந்த advertisementல வர மாதிரி என்னக்கு டி எல்லாம் போட்டு குடுகிரியா... என்னோட மூளை செம்ம sharpa வேல செய்ய ஆரம்பிசிரிச்சு ...
அவள் :- ஞாபக சக்தி ? உங்களுக்கு ? இத கதை எல்லாம் உங்க Project Managerகிட்ட சொல்லுங்க.. அவர் நம்புவார்.. யார் காதுல பூ ? உங்களுக்கு சுட்டு போட்டா கூட ஒரு லிஸ்ட்ல மூணு Item மண்டையில தங்காது ? மரியாதையா உண்மைய சொல்லுங்க...
அவன் :- அது ஒன்னும் இல்ல...
அவள் :- என்ன மேன்னுமுழுங்குறீங்க...
அவன் :- ராஜேஷ் Receptionல ஒரு சூப்பர் Figure....
அவள் :- என்னது .. ???
அவன் :-... இதே பொடவையை கட்டிக்கிட்டு வந்தா ..
அவள் :- யவ அவ ?
அவன் :- யாருன்னு தெரியில... அது நீன்னு நெனச்சு...நா வழக்கமா உன்னோட ஹன்ட்பாக் இழுக்குற மாதிரி இழுத்தேனா .. அவ லபோ-திபோன்னு கத்த ஆரம்பிச்சிட்டா ... அப்றம் நல்ல வேலை உன் தங்கை என்ன பார்த்து .. காப்பாதினா .. அது நால தான் எனக்கு இந்த புடவை ஞாபகம் இறுக்கு..
அவள் :- !!@@##@@#$@#$$#@#$

Friday, May 28, 2010 by Hari
Categories: , | Leave a comment

Leave a Reply