கக்கூஸ் Chronicles...

Before I start, let me tell you that this post might be in bad taste (pun unintentional) for some, and in very bad taste for many. Hence please ignore if you are offended.

My apologies to my non-Tamizh friends. I have been regularly been posting in Tamizh. I know thats turning off a lot of people, but I hope you can understand, that there are somethings which can only be expressed beautifully or should I say, tactfully, in one's mothertongue. So here goes my next post, titled கக்கூஸ் Chronicles.
(Kakoos in Madras Tamizh means - Toilet)

Before I go any further, I would like to reiterate that this word Kakoos has become a part and parcel of the Tamizh Language. I am surprised that Kakoos does not have a wiki page. The origin of the word Kakoos is attributed by some to Malay, while some others give the credit to Portuguese. I personally think, the word originated from the folks of southern Andhra who migrated to Chennai, decades ago. Anyway, now that we have found the 'roots' of kakoos, lets get on with it, er... I meant the story.

இங்கே கூறி இறக்கும் அணைத்து சம்பவங்களும், நிஜம் நிஜம் நிஜம் !!!

Titleல படிச்ச உடனே நீங்க "ச்ச என்னது இது .. இப்டி கலீஜா டைட்டில் வெச்சுஇருக்கானு நெனைக்கலாம், ஆனா அத பத்தி எல்லாம் நான் இப்போ கவலைப்பட போறதில்லை .. இந்த கதைய படிச்சிட்டு..நான் நல்லவனா இல்ல ரொம்ப நல்லவனான்னு நீங்களே முடிவு பண்ணுங்க... "

எனக்கும் ககூசுக்கும் ஏழாம் பொருத்தம். எந்த ஜன்மத்த்ல யாருக்கு என்ன கொடுமை இழைதேனோ ... இந்த கக்கூஸ் என் வாழ்க்கைல ரொம்பவே விளையாடி இறுக்கு ...

எனக்கு ஒரு 9 வயசு இருக்கும், எங்க பெரியப்பா பைய்யன் கல்யாணத்த முடிச்சிட்டு செங்கல்பட்டிலிருந்து கெளம்பினோம், குன்னூருக்கு. கெளம்பறதுக்கு ஒரு மனி நேரம் முன்னாடி, தெருவில வேர்கடலை விக்கறவன் போனான் .. இங்க தான் கதையோட Turning Point... அந்த வேர்கடலைய நல்லா தின்னுபுட்டு பஸ்ல ஏறி உட்கார்ந்தேன்.
ஒரு 2 மனி இருக்கும் (Night)... உள்ள ஒரே கடபுட கடபுடனு சத்தம்...
"என்ன சத்தம் இந்த நேரம்னு" நானும் யோசிக்க, எனக்கு கக்கா வர போகுதுன்னு நான் அப்போ தான் realise பண்ணேன்...
"அப்பா, எனக்கு ஆய் வருது ... "
தூக்கத்துல இருந்த அவர், இத கேட்ட உடனே, சடார்னு முழிசிகிட்டாறு ..
"என்னடா சொல்ற ...?"
"எனக்கு ஆய் வரா மாதிரி இறுக்கு .."
எங்க அம்மா, "அந்த வேர்கடலையை நீ கண்டதும் காணாததுமா சாப்பிடும் போதே நெனச்சேன்... இது எங்க பொய் வெளியே வர போகுதோன்னு..."
நான் என் மனசுக்குள்ள, "ரோட்ல போற சனியன தூக்கி பனியன்ல போட்டுகருதுன்னு இத தான் சொல்லுவாங்களோ". சேலேமா ஈரோடா நு தெரியல .. ஒரு பெரிய Bus Stand ஒன்னு வந்தது...

என்னால இதுக்கு மேல அடக்க முடியல... பண்ட்லியே போய்ட்டேன் ... போன அப்பறம் தான் ஒரு தெளிவு வந்தது ... சப்ப்ப்பப்பா ... ஆய் போயாச்சு ... சோசா ??(அத கழுவறது) அத எப்டி பண்றது . அந்த வேலையில நாங்க எங்க பொய் தண்ணி தேடறது ... அப்போ மழை சீசன் ... அங்க அங்க குலம்குலமா நெறைய குட்டைகள்.. அதுல ஏதோ ஒண்ணுதல இருந்த தண்ணியே எடுத்து சோசா இனிதே நடந்து ...
சோசா ஓகே.. பேன்ட் என்ன ஆச்சுனு தானே யோசிகிறீங்க .. ?? அந்த பேன்ட ஒரு பிளாஸ்டிக் கவர்ல போட்டு ... ரெண்டு மூணு உபரி கவர்கள் போட்டு ... கைய்யோட வீட்டுக்கு தூக்கிட்டு வந்தோம்...

இதெல்லாம் ஒரு பொழப்பான்னு நீங்க கேக்கறதுக்கு முன்னாடி ... இன்னொரு சம்பவம் ...

நான் ஏழாம் கிளாஸ் படிச்சிட்டு இருந்த பொது, இதே மாதிரி கண்டதும் காணாததுமா எதையோ தின்னுபுட்டு ... கடபுடகடபுடானு வயிறு கலங்க ஆரம்பிக்க ... நல்லா வேலை மனி அடிச்சிது ... நானும் வீடு பக்கம் ஓட ஆரம்பிச்சேன் ... வீட்டுக்கும் , சம்பவம் நடந்த எடத்துக்கும் ஒரு 200 மீட்டர் தான் தூரம்... என்னால முடியல ... பேன்ட்லியே போய்ட்டேன் ...

வீடு வரைக்கும் எப்டி நடக்க போறோம்னு தெரியல... ரோட்டோரோமா நின்னுட்டேன் .. என் கூட படிக்கற பைய்யன் ஒருத்தன் அந்த வழியா வந்தான் .. நல்லவன் .. இனிக்கு நெனைச்சு பார்க்கும் போது அவன் மட்டும் இல்லனா அன்று என் கதி என்னனு நெனச்சு பார்த்தேன் ... நாறிர்க்கும் !!!

அந்த நல்லவன் எங்க வீட்டுக்கு பொய் என்ன சொன்னான்னு தெரியுமா ? 'ஹரி,2 Toilet, Standing There'. அவன் சொன்னது என்னனு தெரியாம எங்க வீட்ல பதறி பொய் வந்தாங்க... அதுக்கு அப்பறம் ஒரு வாரத்துக்கு என்ன ஒட்டி தீர்த்துட்டாங்க. அதுக்கு அப்பறமா நல்ல வேலை..வேற ஒன்னும் நடக்கல ...

இதெல்லாம் கூட பரவாஇல்லை .. நான் வேலைக்கு சேர்ந்த முதல் நாள். செம்ம பந்தாவா Auditoriaல உட்கார வெச்சாங்க.Notepad எல்லாம் குடுத்தாங்க. ஒரு மனி நேரம் மொக்க போட்டுட்டு , ஒரு சின்ன பிரேக் விட்டாங்க.அந்த பிரேக் விட்ட 'கெப்ள' தான் எனக்கு மறுபடியும் கடபுடகடபுடா. நானும் கக்கூஸ் பக்கம்மா போனேன்... அங்க போனேனா..., அப்டியே ஷாக் ஆயிட்டேன்!! ககூஸ்ல தண்ணியே இல்ல.அது மட்டும் இல்லாம அது இங்கிலிஷ்காரன் கக்கூஸ் .அவ்ளோ பெரிய கம்பெனில, ஒரு இந்தியன் கக்கூஸ் தேடின முதல் ஆள் நானாக தான் இருப்பேன்னு நெனைக்கிறேன். அந்த ககூஸ்ல உட்காரவே முடியல.. செரியா போகவும் முடியல... சப்ப்ப்பப்பா ... ககூசயே கலீஜ் பண்ணிட்டேன்...

அதுக்கு அப்பறம் ஒரு மூணு வருஷம் நல்லா ஓடிடிச்சு ... நானும் இங்கிலீஷ் கக்கூஸ் use பண்ண கத்துகிட்டேன். ஆனா அப்போ கூட எனக்கு தண்ணி தேவை ... பேப்பர் எல்லாம் உவாக் உவாக் ...

நிற்க, இப்போ கைரோல, நான் வேலை பார்க்கிற எடத்துல, கக்கூஸ் எல்லாம் இறுக்கு, ஆனா தண்ணி தான் இல்ல.. !!!! ஆண்டவா .. நான் யாருக்கு எந்த ஜன்மத்துல என்ன பாவம் செய்தேனோ ....!!!

உலகுத்துல எத்தனையோ நாடுகள் இருக்கும் போது, என்ன மட்டும் நீ ஏன், இங்கிலிஷ்காரன் கக்கூஸ் இருக்கிற நாடாவே அனுப்புற ?

Wednesday, June 2, 2010 by Hari
Categories: , , , , | Leave a comment

Leave a Reply