முகமுடி - हँसी के मुखौटे - Mask

The tamizh version of हँसी के मुखौटे . I am calling this story as முகமுடி.

-----------------------------------------------------------------------------------------

நான் ரொம்ப நாள் கழிச்சு மாதவன சந்திச்சேன். ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர பார்த்ததுல ரொம்ப சந்தோசம். மாதவனுக்கு விருந்தோம்பல்னா உயிர்.
naan அவர பார்த்து, ஒரு பதினைந்து வருஷம் ஆயிருக்கும். அப்போ
அவர் ஒரு செய்திதாள்ல சப் எடிட்டரா இருந்தாரு. அப்போ அவருக்கு வயசு 30. இன்னிக்கு அவர பார்க்கிற போது தான் காலம் போனதே என்னால உணர முடிஞ்சுது. அவர் முகத்துல, என்னால காலத்தின் சின்னங்கள பார்க்க முடிஞ்சுது. நான் பெங்களூர்ல வர்ற விஷயம் அவருக்கு எப்டி தெரிஞ்சுது ?

'எல்லாம் நம்ம கேசவன் தான் சொன்னாரு ... நீங்க அவருக்கு லெட்டர் போட்டு இருந்தீங்க போல இருக்கே ? நீங்க வரர்தா அவர் தான் சொன்னாரு. உங்கள காண்டக்ட் பண்ணனும்னு நான் எவ்ளோ ட்ரை செஞ்சிருப்பேன் தெரியுமா ?'

'என்.. ? என்ன ஆச்சு ?'

'ஒரு காலத்தில தொடர் கதை எழுதிட்டு இருந்தேன்.. இன்னிக்கு, நானே ஒரு தொடர் கதை ஆயிட்டேன்' அப்டின்னு சொல்லிடு, மனுஷன் சிரிச்சாரு. அந்த சிரிப்பில எனக்கு வலி அதிகமாவும், போலித்தனம் கம்மியாகவும் தெரிஞ்சது, ஆனா நான் அதை காட்டிகல

'வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்க இல்ல ?'

'ஹான் ஹான்... எல்லாம் நல்லா இருக்காங்க. வாழ்கை கோணலாவே போயிட்டு இருந்தா, கொஞ்ச நாள் கழிச்சு, அது,நேரா போகுற மாதிரி தெரியும். சிரிக்க கத்துகிட்டேன். அழவும் கத்துகிட்டேன் .. கஷ்டத்துல அழுகையவிட எனக்கு சிரிப்பு தான் அதிகமா கை குடுத்திருக்கு.

என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியல. அவர் விடல...

'நாம தான் ஒழுங்க இல்லையே.. பசங்களுக்கு காகவாவது ஒரு நல்லா வாழ்கை அமையட்டுமேனு கஷ்ட பட்டேன். வாழ்கை அமைச்சும் குடுத்தேன். ஆனா உங்களுக்கு தான் தெரியுமே, ஏதோ பழமொழி சொல்றாப்பல '

'அவன் நல்லா தானே இருக்கான் ?' நான் அவர் பிள்ளையை பற்றி கேட்டேன்.
'ஹ்ம்ம்... நல்லா தான் இருப்பான்னு நினைகிறேன். அங்க எல்லாரும் சந்தோஷமா தான் இருப்பாங்க...' அப்டின்னு மாதவன் புதிர் போட்டாரு.
அந்த புதிருக்கு விடை கான்றதுக்குள்ள ,'அவன் இப்போ இந்த உலகுதுல இல்ல சார்...'என்றார் ... அதற்க்கு அப்பறம், அவர் சிரிச்ச சிரிப்பு இன்னிக்கும் என் மனசுல பதிஞ்சிருக்கு.

'அவன படிக்க வைக்க நான் என்னவெல்லாம் கஷ்ட பட்டேன் தெரியுமா சார். உங்களுக்கு தெரியாததா ?'

நான் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல், பதில் சொன்னேன், 'உங்க கஷ்டம் எனக்கு புரியுது மாதவன்.'
மாதவன் தொடர்ந்தார்.

'நல்லா படிப்பான் சார். நல்லாவும் படிச்சான். பீ காம். பாங்க்ல வேலை சார். யாரு சிப்பாரிசும் இல்லாமல். அவனே சேர்ந்துகிட்டான். என்னை யாரு பின்னாடியும் சுத்த விடல சார். பெங்களூர்ல தான் வேலை. மோதல் மாச சம்பளத வீட்டுக்கு கொண்டு வரும் போது, ஒரு விபத்து. நாங்க பெத்தவங்க சார். அனுபவிச்சு தான் ஆகணும். ஆனா அந்த பொண்ணு என்ன பாவம் சார் செஞ்சுது ?''

எந்த பொண்ணு ?

அவன் பொண்டாட்டி. பாவம் அந்த பொண்ணு.

நான் என்ன சொல்றது ? என்னனு சொல்றது. புத்திர சோகம் . யாரு என்ன சொன்னாலும், அதுக்கு ஒண்ணுமே பண்ண முடியாது.ஆனா, என் மனசுக்குள்ள , மாதவன் இதெல்லாம், நம்ம கிட்ட காச கறக்க தான் சொல்றரோன்னு ஒரு எண்ணம் இருந்துகிட்டே இருந்தது. அனுதாபம் என்கிற முகமுடிக்கு கிழ, சில சமயம் சுயநலமும் கொஞ்சம் இருக்கும் என்றது, என் உள்மனசு.

'நீங்க கண்டிப்பா என் வீட்டுக்கு வந்தே ஆகணும்.'

'இல்ல மாதவன். இன்னொரு தடவை கண்டிப்பா வரேனே.'

'இல்ல இல்ல.. நீங்க கண்டிப்பா வந்தே ஆகணும்.'

'சேரி.. ஹ்ம்ம்.. ஒரு அஞ்சு மணிக்கா வர்றட்டா ? அண்ணியையும் பார்த்து பேசிட்டு போனா மாதிரி இருக்கும் ?'

'.. நீங்க சுஜாதாவை சொல்றீங்களா... அவ இப்போ அவங்க அண்ணா வீட்ல இருக்கா. கொஞ்ச நாளைக்கு. மனசுக்கு ஒரு மாற்றம். நானும் என் பையனும் தான் இருக்கோம். என் பைய்யன் எல்லாத்தையும் பார்த்துக்கிறான். சமையலும் பண்றான்.. காலேஜுக்கும் போறான்.'

'ஹ்ம்ம்...உங்களுக்கு ஒரு பொன்னும் இருக்கா இல்ல ?'

'ஹ்ம்ம்.. ஆமா... வேலை பண்றா. ஏதோ கன்சுல்டிங் கம்பநியாம் ... வீடு வீடா பொய், சர்வே எடுக்கிற வேலையாம். தின கூலி. ஒரு நாளைக்கு ௩௦௦ ருபாய் தேறும்... நல்ல அலைச்சல்.'

'ஹ்ம்ம்.. காலம் போனதே தெரியல இல்ல ?'

'என்னத்த சொல்றது சார். பொண்ணுக்கு கல்யாண வயசு. ஆனா என் கிட்ட வசதி இல்லையே. பொண்ண வெச்சே கடன் எல்லாத்தையும் மாதவன் அடசிடுவான்னு ஊரே பேசிக்குது... ஆனா உண்மை என்னன்னா.. என் கிட்ட வரதட்சினை குடுக்கிற அளவுக்கு வசதி இல்ல..'

அவர் என் கிட்ட கடன் கேட்கறா மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாகிட்டாறு. எனக்கு அதுல இஷ்டமே இல்ல. அதுனால, நான் பேச்சை மாத்தினேன்.

'நான் பேங்கேளூரு வந்த விஷயமே என்னோட வேலை சம்பந்தமானது. நீங்க என்ன பண்றீங்க இப்போ ?' என்றேன்.

'நானா ? நெறைய வேலைகள் பண்ணேன் சார். அதை ஏன் கேக்கறீங்க. இப்போவெல்லாம், வேலை செய்யறதே வேஸ்டுன்னு நினைகிறேன்'.

'நீங்க இன்னும் அதே பேப்பர்ல தானே இருக்கீங்க.. ?

'ச்ச ச்ச அத விட்டு பல வருஷம் ஆச்சு. இப்போவெல்லாம் நான் அத படிக்கறது கூட இல்ல..' மறுபடியும் ஒரு சிரிப்பு.

'நான் பேப்பர விட்டுட்டு, ஒரு பப்ளிகேஷன் கம்பனியில வேலைக்கு சேர்ந்தேன்.'

'வேலை எப்டி போயிட்டு இருக்கு ?' - எனக்கு என்னன்னா, அவர் என் கிட்ட கடன் கேட்டு, நான் அதை மருதுட்டேன்னா, எனக்கு ஒரு குட்ட்ரைனர்ர்ச்சி இருக்க கூடாது என்றதுக்காக .. அவர் வேலை செய்கிறார்.. சம்பாதிக்கிறார்...அவ்ளோ தான்.

'இப்போ நான் அங்க வேலை பார்கல சார்.'

'என்ன ஆச்சு ?'

'என்ன தூரத்தி அனுப்பிட்டாங்க ..'

'துரதிட்டாங்களா ?'
மாதவன் திருடன் கிடையாது. அது எனக்கு நல்லாவே தெரியும். அவர் பொய் சொல்லமாட்டார்.

'ஆமா. என் மேல கம்பனி பைசாவ துஷ்ப்ரயோகம் பண்ணேன்னு கேஸ் போட்டாங்க. ஆமா சார்.நான் பைசாவ எடுத்தேன். paiyyan ஆஸ்பத்திரி செலவு காக எடுத்தேன் சார். விடியறதுக்குள்ள மறுபடியும் அதே இடத்துல வேச்சிடலாம்ன்னு நெனைச்சேன். அதுக்கான தண்டனையும் எனக்கு கெடைச்சுது. ரெண்டா மூனா ?? ஆயுள் தண்டனை சார்.'

இந்த தடவை அவர் மறுபடியும் சிரிச்சார். கண்ணள தண்ணீர் வரவரைக்கும் சிரிச்சாரு.

'ப்ராவிடேன்ட் பண்ட எல்லாம் ?'

'எல்லாத்தையும் எடுதிகிட்டாங்க ... நூத்துகனக்கான பெடிஷன் போட்டேன். ஒன்னும் பிரயோஜனம் இல்ல . ஒருத்தனும் ஒன்னும் குடுக்கல. குடும்பமா வேலையா நு கேட்டாங்க.. நான் குடும்பத்த சூஸ் பண்ணேன்.'

அவர் என் கிட்ட பைசா கேட்க போற அந்த நேரம் வந்த மாதிரி எனக்கு தொனித்தது. நான் உடனே வெய்ட்டரை கூப்பிடறதுக்கு பெல் அழிதிநேன்.
வேயட்டேரும் வந்தான், ஆனாலும் மாதவன் தொடர்ந்தார்.

நீங்க என் பழைய நண்பர்.எனக்கு இனிக்குமே நல்லதே நடக்கணும்ன்னு நினைகிறவர். நீங்க தயவு செஞ்சிகன்னா எனக்கு ஒரு வேலை வாங்கி தரலாம்.
'இதுல என்ன இருக்கு மாதவன். நான் மெட்ராஸ் போன உடனே, இத பற்றி எதாவது பண்றேன்.'
என் பதிலில் அனுதாபம் கொறைவு, போர்மளிட்டி அதிகமா இருந்தது.

நீங்க ராத்திரி சாப்பாடு, என் வீட்ல தான் சாப்பிடனும். நானே வந்து உங்கள கூட்டிகிட்டு போறேன். என் வீடு கூட ஸ்டேஷன் பக்கத்துல தான் இருக்கு.
நானே உங்கள ஸ்டேஷன்ல கொண்டு விட்டு வந்திடுவேன்.


அன்று இனிதே, எல்லா வேலைகளும் முடிந்தது. நான் ஹோடேல்லுக்கு வரும் பொழுது மாதவன் எனக்காக காத்திருந்தார்.
'வாங்க வாங்க.. கலச்சுபோய் வந்திருப்பீங்க.. இந்தாங்க காபி குடிங்க.'
மாதவன் தான் பில்ல பெ பன்னரு. எனக்கு சங்கடமா இருந்தது. அவருக்கோ வேலை இல்ல.. அவர் என்னோட காபிக்கு பணம் குடுக்கறது எனக்கு நாகரீகமா படல. ஆனா மறுபடியும், என்னோட உல் மனசு பேசிது. பைசா பைசாவ பார்த்து பார்த்து செலவு பண்ற மனுஷன், செலவு பண்றான்னா, சும்மாவா ? ஆனா அவருக்கு என்ன வேணும்ன்னு என்னாலா செரியா புரிஞ்சிக்க முடியல.

குளிச்சிட்டு, சாமான் எல்லாம் எடுத்துகிட்டு, ஹோட்டல் பில்ல கட்டினேன். மாதவன் வண்டி ஏற்பாடு செஞ்சிருந்தாரு. அவர் வீட்டுக்கு சென்றோம்.
நல்ல காலனி .சின்னதா ஒரு வீடு. ஒன் பெட்ரூம் பிளட். வீடுக்குள எங்க திரும்பினாலும், புக்ஸ். தரையில்ல ஒரு தேஞ்சு போன கார்பெட். ரூமுக்கு நடுல்ல சின்னதா ஒரு டேபிள். அதுக்கு மேல ஒரு லண்டேர்ன்.

'வயத்துகாக எல்லாத்தையும் வித்துட்டேன். புஸ்தகங்களை விக்க முடியல. யாரும் வாங்கல, அது வேற கதை',
மறுபடியும் ஒரு சிரிப்பு.
'இதையும் யாரவது வாங்கினாங்கன்னா என் தலையில இன்னொரு பாவம் வந்து சேரும்.'


நான் இங்கயும் அங்கயும் நோட்டம் விட்டுகிட்டு இருந்தேன். அவர் ராத்திரி டிபீனுக்காக கூட்டிகிட்டு வந்திருந்தாரு.பைய்யன் கன்ன்லியே தென்படல.

'உங்களுக்கு ஒன்னு தெரியுமா சார் ? இந்த உலகத்துல, எத்தனையோ பெரிய மனுஷங்க இருக்காங்க, ஆனா, என்ன பொருத்தவரைக்கும், பெரிய மனுஷங்க யாரு தெரியுமா ? எங்க பால்காரனும், வீடுசொந்தகாரரும் தான்.நாங்க கேட்ட அப்போவெல்லாம், கடன் குடுத்திருக்காங்க.ஒரு தடவை கூட திருப்பி எப்போ குடுபன்னு கேக்கல. உற்றார் உறவினர்கள் எல்லாம் கூட கை விரிச்ச போதுகூட இவங்க முஞ்சிய திருப்பிட்டு போல.'


எனக்கு பளார்ன்னு அறைஞ்சா மாதிரி இருந்தது. ச்ச என்ன மாதிரி மனுஷன் !! கடன் வாங்கறதுக்கு எப்டி அஸ்திவாரம் போடறாரு.அதுவும் ஒரு விருந்தாளிகிட்ட .

'உங்க சாப்பாடுக்கு நேரம் ஆயிடிச்சுன்னு நேனைகிரேன். பைய்யன் கிட்ட சொல்லி இருந்தேன் சார். வந்துகிட்டே இருப்பான்னு நேனைகிரேன்.
இந்நேரம் தினம் வந்திடுவான்.


'நான் ராத்திரி சாப்பிடறது இல்ல மாதவன். நீங்க கூப்டீங்கேன்றதுகாக தான் வந்தேன். உங்களுக்கு ச்ரமம் வேண்டாம்.

பசி. ஆனாலும் காடிக்க முடியல.நான் அவரை ஆச்வாச படுத்தினேன்.
அவர் மறுபடியும் பேச ஆரம்பிச்சாரு. அவர் ௧௦ வருஷம் முன்னாடி எழுதின எழுத்தெல்லாம் காட்டினாரு. அது முடிஞ்ச உடனே, இன்னொரு கட்ட எடுத்தாரு. இது அவர் அனுப்பி, அச்சுக்கு வராத எழுத்துக்கள். மாதவன் அவர் ராமாயணம் சொல்லிட்டு இருந்தாரு. எனக்கு பயங்கர கடுப்பாக இருந்தது. வாழ்கை சுமை ஆனா, கசப்பான அனுபவங்களே மிஞ்சும். பசி இருக்கும் போது, கசப்பான அனுபவங்கள் கேக்கறதுக்கு இனிமையா இருக்காது.

'அவன் என் இன்னும் வரலன்னு தெரியலயேன்னு அவர் மறுபடியும் அதே பல்லவியை தொடங்கினாறு.

'பரவாஇல்ல மாதவன். காலேஜ் பைய்யன், நண்பர்களோட எங்கையாவது வெளிய பொய் இருப்பான்.

'இந்த காலத்து பசங்கள பத்தி தான் உங்களுக்கு நல்லாவே தெரியுமே. அப்பனுக்கு வேலை இல்ல, ஆத்தாளும் வீட்ல இல்லனா, அவுத்து விட்ட கழுதை தான். எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு சார்.'

'ச்ச ச்ச, இதுல என்ன அசிங்கம். சின்ன பைய்யன்.அப்டி தான் இருப்பான். சேரி, எனக்கு வண்டிக்கு நேரம் ஆச்சு. இங்கிருந்து,ஒரு டாக்ஸி கிடைக்குமா ?

'எதுக்கு சார் டாக்ஸி, இதோ இருக்கு ஸ்டேஷன்'
ன்னு சொல்லி, அவர், என் சூட்கேச எடுத்தாரு. கிடுகிடுன்னு நடக்க ஆரம்பிச்சாரு. பத்தே நிமிஷத்துல ஸ்டேஷன் வந்துட்டோம். கெளம்பறதுக்கு முன்னாடி, என் கிட்ட ஏதாவது கேட்பாருன்னு நெனைச்சேன். ஆனா, அவர் எதுவுமே கேட்கல.
கேசவன் ஸ்டேஷன் வந்திருந்தாரு.

'சாப்டீங்களா ?' அப்டின்னு அவர் கேட்டாரு.

'ராத்திரி வேலையில அவர் சாப்பிடறது இல்லையாம் கேசவன்.' என்றார் மாதவன்.

நான் கேசவன் கிட்ட கண் ஜாடையால எதுவும் பேச வேண்டாம்னு சொன்னேன். ட்ரெயின் வந்தது. நானும் ஏறி உட்கார்ந்தேன். அடுத்த ஸ்டேஷன்ல நான் சாப்பிட்டேன். யாரு கிட்டயும் ஒரு வார்த்தையும் சொல்லல.

ஒரு வாரம் கழிச்சு எனக்கு ஒரு லெட்டர் வந்தது. மாதவனோட பைய்யன் எழுதிருந்தாரு.

'அப்பா உங்களை பத்தி நெறைய சொல்லிருக்காரு. அவர் உங்க பெயர சொல்லும்போதெல்லாம், உங்க மேல ஒரு தனி மரியாதை அவர் குரல்ல தெரியும். நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கறேன். எங்க நிலமைய நான் உங்களுக்கு எடுத்து சொல்லனும்னு அவசியம் இல்ல. தன்னோட நண்பர்கள் எல்லாம், வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்து உபசாரம் பண்ணனும் அவருக்கு ஆசை. ஆனா அதுக்கான வசதிகள் தான் இல்ல.

எட்டு வருஷமா அவருக்கு வேலை இல்ல. எங்கிருந்தும் உதவி வரல. எதனை இன்னல்கள். எவளவு அவமானம்.உண்மைய ஏத்துக்குற மன நிலையில அவர் இல்ல. மாசத்தோட கடைசி வாரம். வீட்ல மணி அரிசி இல்ல, எங்க அப்பா உங்களை வீட்டுக்கு கூப்டாரு. நான் என்ன செய்வேன் ? எங்க போவேன். ? எங்க அக்கா சம்பாதிக்கிற காசுல தான் எங்க வயிரே ஆறுது. அவ கஷ்டப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமா எங்க கடன் எல்லாத்தையும் அடைச்சிட்டு இருக்கா. போன்னோடைய சம்பாதியத்துல தன்னோட நண்பர்கள என்டேர்தைன் பண்றது எந்த விதத்துல நியாம்ன்னு எனக்கு தெரியல . அத பத்தி நான் விவாதிக்க விரும்பல.

எதுவாக இருந்தாலும், என்னால உங்களுக்கு ஏற்பட்டுரிந்த அசௌகரியத்துக்கு நான் வருந்துகிறேன். அடுத்த ஸ்டேஷன்ல நீங்க டிபன் சாப்டிருபீங்க. இந்த லெட்டெர படிச்ச உடனே, அவமானத்துனால வந்த கோபமும் கொஞ்சம் கொஞ்சமாக கறஞ்சிடும்ன்னு நினைகிறேன் .'


லெட்டெர படிச்ச உடனே, மாதவனோட அந்த முகம்மும், அவரோட அந்த சிரிப்பும் தான் என் கண் முன்னாடி, திரும்ப திரும்ப ஓடிகொண்டு இருந்தது.

-----------------------------------------------------------------------------------------

Please do let me know, what you think of this story.

Wednesday, June 9, 2010 by Hari
Categories: , , , , | Leave a comment

Leave a Reply