Those 'Turshi' Days !!! - 2

As with my previous post, this one was also inspired by the TN Govt. Textbooks. This one is in Tamizh, so Non-Tamizh folks, kindly excuse. And unlike the first Post, this one is entirely fictional... biggrin

கும்பலோட கோவிந்தா !!!!

Scene 1 - Act 1 :-
6:00 PM
[ விடிஞ்சா கெமிஸ்ட்ரி எக்ஸாம் ... பசங்க படிக்கிற லட்சணம் ...]

மொதல்ல ஒருத்தன் வர்றான்.... அவன் கூடவே இன்னொரு அல்லக்கையும் வர்றான் ..
மச்சான் .. படிச்சிட்டியா டா ?
டேய் .. வந்த உடனே கடுப்பெத்தாத ...
நானும் மகேசும் ரெண்டு சாப்ட்டர் முடிச்சிட்டோம் டா ...
நெம்ப சந்தோசம் டா ... இத சொல்ல தான் இவ்ளோ தூரம் வந்தீங்களா
கோவிச்சுக்காத மாமா ... நானும் ஒன்னும் படிக்கல்ல ..சும்மா சொன்னேன்..
சேரி சேரி.. வாங்க ... எல்லாரும் படிக்கலாம் ..

Scene 1 - Act 2 :-
6:45 PM
Planck’s constant, h = 6.626 × 10-34 Js
மச்சான் யாரு டா இந்த பிளான்க் ?? அவன் எதுக்குடா இவ்ளோ பெரிய நம்பெர கண்டுபிடிச்சான் ?
தெரியலடா மாபிள , இவனுங்க பாடுக்க கண்டுபிடிச்சிட்டு அவனுங்க பெயர வெச்சுட்டு போய்டுறாங்க... பாஸ்கரு நம்ம உயிரை வாங்கறான் !!!
[குறிப்பு - பாஸ்கர் தான் கெமிஸ்ட்ரி சார்]
அத விடு டா மச்சான் , செரி, நீ அந்த வசீகரா பாட்டு பார்த்தீயா ? ரீமா சென் எப்டி ? படம் கூட நல்லா இருக்கான் டா ...
போர்ட் எக்ஸாம் முடியட்டும், அடுத்த நாளே பொய் நாம அந்த படத்த போய் பார்க்கறோம் ... என்ன...?
ஆமாம் டா
அந்த பாட்டுல மாதவன் செம்மையா இருப்பான் டா..
ஆமாம் டா .. நானும் கேள்வி பட்டேன் .. இப்போவெல்லாம் எல்லா பொண்ணுங்களும், அவங்க ஆளு, மாதவன் மாதிரி இருக்கணும்ன்னு கண்டிஷன் போடறாங்களாம் டா ..
ஹ்ம்ம் .....

Scene 1 - Act 2 :-
7:00 PM
p block elements grouped with s block elements are called as main group elements
டேய், யாருடா அந்த புது மிஸ்ஸு ?
யாரு டா ?
அதான் டா, காமெர்ஸ் க்ரூப்க்கு கிளாஸ் டீசேரா வந்திருகாங்களே ?
அவங்களா, பேரு விமலா, இதுக்கு முன்னாடி நம்ம XYZ ஸ்கூல் ல வேலை பார்தாங்களாம், இப்போ புருஷனுக்கு இங்க வேலைன்னு தெரிஞ்ச உடனே, வேலையே மாத்திட்டாங்களாம் ..
அப்போ அவங்களுக்கு கல்யாணம் ஆயிடிச்சா ? ச்சே ...
டேய்.. கவனத்த சிதற விடாம படி ...
சேரி..உனக்கு இதெல்லாம் எப்டி தெரியும்...
எப்படியோ தெரியும்... Free a Vidu Free a Vidu..

Scene 1 - Act 3 :-
7:20 PM
The general electronic configuration of p-block elements is ns2 np1-6
மச்சான், இந்த ரமேஷு ரொம்ப பெரிய கில்லாடி டா ..
என்னடா ஆச்சு ?
எக்ஸ்பெரிமென்ட் செஞ்ச அன்னிக்கு அண்ணேன் எப்செண்டு..
அதான் தெரிஞ்ச விஷயம் ஆச்சே ...
அவன் என் கிட்ட ரீடிங் எல்லாம் வாங்கிட்டு, ஏதோ அவனே செஞ்சா மாதிரி பில்டப் எல்லாம் குடுத்து, அந்த சத்யா பொண்ணு கிட்ட நல்லா வழிஞ்சான் டா ...
டேய்.. அவன் அந்த பொண்ணு கிட்ட பேசினா உனக்கென்ன டா ? உனக்கு தான் ஏற்கனவே ஆள் இருக்கில்ல ?
அதெல்லாம் கூடாது ... என் அழகுக்கு ரெண்டென்ன பத்து பிகர் கூட மடங்கும் டா...
ஐயோ ராம... இவன் இம்சை தாங்கல டா சாமி ...

Scene 2 - Act 1 :-
7:45 PM
Optical Isomerism is the phenomenon by which, certain organic and inorganic compounds have the property of rotating plane polarised light.
Half Life, Half Life நு சொல்றாங்களே ...அப்டினா என்ன டா ?
அது ஒன்னும் இல்ல டா... அந்த பெயர்ல புதுசா ஒரு கேம் வந்திருக்கு டா... அப்டியா டா ?
ஆமாண்டா ... First Person Shooter Game. செம்ம த்ரில்லிங்கா இருக்கான்... எங்க அண்ணன் சொன்னான் ...
டேய், அவன் கெமிஸ்ட்ரி ல வர Half Life பத்தி கேக்கறான் டா...
டேய், நாயே.. உன் கிட்ட எத்தன தடவ சொல்லிருப்பேன் .. படிப்ப பத்தி என் கிட்ட கேக்காதனு...

Scene 2 - Act 2 :-
8:00 PM
When the concentration of the reactant is increased by ‘n’ times, the rate of reaction is also increased by n times.
மச்சான், அந்த பாஸ்கர், மார்கே போடறது இல்ல டா..
நீ பக்கம் பக்கமா எழுதினியா ?
ஆமாம் டா...
அங்க தான் நீ தப்பு பண்ற.. அந்த ஆளு, வேரும கையெழுத்து மட்டும் தான் பார்பான் டா.. நீட்டா எழுதினா மாற்கு...
ஹ்ம்ம்ம்...
அது மட்டும் இல்ல... அந்த ஆளுக்கு இப்போ கல்யாணம் வேற பிக்ஸ் ஆயிருக்கு... அண்ணேன் காத்துல மேதந்துகிட்டே தான் பேப்பர் எல்லாம் கரெக்ட் பண்றாரு...
அப்டியா டா... ? உனக்கு யாரு டா சொன்னா..
நம்ம ஷரோன் தான் டா சொன்னா ...
அவளுக்கு எப்டி தெரியுமா ?
அவ தான் அவர்கிட்ட டுஷன் போறா இல்ல ?
டேய், அப்போ அவ டுஷன் போனா, சார் அவருக்கு கொஸ்டீன் பேப்பர் எல்லாம் சொல்லிடுவாரா டா...??
டேய்..பாஸ்கர் சொல்லிடுவானா ? சொல்லி தான் பார்க்கட்டுமே... மவனே எங்க அண்ணேன வெச்சு, அவன் சோலிய முடிச்சிடுறேன் ...
செரி செரி.. நீ டென்சன் ஆகாம படி ...

Scene 2 - Act 3 :-
8:30 PM
Alcohols undergo intermolecular dehydration by treating with con. H2SO4 acid to give ethers.
மச்சான், என்ன டா நம்ம சுந்தர் பய்யன்ன ரொம்ப நாளா காணோம் ...
டேய் அவன் அந்த பூஜாவ கரெக்ட் பண்ணிட்டான் டா.. அந்த திமிரு ... வேற ஒன்னும் இல்ல.. அவங்க அண்ணன்கிட்ட போட்டு குடுதேன்னு வேய் ... அடுத்த வாரத்திலிருந்து கரெக்டா அட்டெண்டன்ஸ் போடுவான்.
மச்சான்... அப்போ பூஜா புக் ஆயிருச்சா ?
ஏன் ? நீ ரூட்டு விடுறியா ?
ஹி ஹி... ஆமாம் டா..
மவனே செவுல்லியே போட்டேன்னா ... நானே ரெண்டு மாசமா ட்ரை பண்ணிட்டு இருக்கேன் ...
செரி செரி மச்சான்... நீ ட்ரை பண்ணிட்டு, உனக்கு செட் ஆகலன்னா எனக்கு சொல்லு டா...
தூ !! டேய்.. உங்களுக்கெல்லாம் வெக்கம் மானம் சூடு சொரணை இதெல்லாம் எதுவுமே இல்லையாடா ?
லவ் பண்றதுன்னு முடிவு பண்ண அப்பறமா, இதெல்லாம் பாற்க கூடாது மாப்ளே..

Scene 3 - Act 1 :-
9:00 PM

டேய் .. சாப்பிட என்னடா இருக்கு ...
வீட்ல ஒன்னும் இல்ல டா ...
என் டா ?
எங்க அம்மாவும் அப்பாவும், ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காங்க டா ...
சேரி.. அப்போ சொத்துக்கு என்ன பண்றது ?
வா, பொய் எதாவது சாபிட்டு வரலாம் ...
என் கிட்ட சுத்தம்மா காசு இல்ல...
உன்கிட்ட என்னிக்கு இருதிருக்கு சொல்லு ?
டேய் .. ரொம்ப கேவல படுத்தற ..
சேரி சேரி... உனக்கு சோறு வேண்டுமா வேண்டாமா ..
வேணும்..
அப்போ மூடிகிட்டு வா...

Scene 3 - Act 1 :-
10:15 PM

செம்ம பரோட்டா டா மச்சான்...
நான் அடிகடி அங்க தான் டா பொய் சாப்பிடுவேன் ...
ஒன்னு கவனிச்சியா...?
அந்த ஆளுக்கு ஒரு பொண்ணு இருக்கு.. சூப்பரா இருந்திருக்குமே ?
டேய்.. எப்டி டா..
தூ !! நாயே.. நீ அவல கண்ணு கொட்டாம பார்த்துகிட்டே, நாக்கை தொங்க போட்டியே...இது போதாதா ?
ஹி ஹி ஹி.. டேய்.. உன் ரேஞ்சே வேற டா..
ஆண்..போதும் போதும்... டைம் ஆச்சு...

Scene 3 - Act 1 :-
11:00 PM

Aldehydes and ketones are reduced to hydrocarbons by heating with hydrazine and sodium ethoxide. This is called Wolff-Kishner reduction.
டேய், நம்ம ரமேஷுக்கு என்னடா ஆச்சு ? இப்டி மாட்டிகிட்டான்..
அதான் டா எனக்கும் புரியல... அவன் கில்லாடி ஆச்சே டா....
செரி, அத விடு, அதுக்கு அப்பறம் என்ன ஆச்சு ?
என்ன ஆகணும், அவனோட அம்மா அப்பாவ வர சொல்லிருக்காங்க ...
அப்பறம் என்ன டா ஆகும் ?
என்ன ஆகும் .. அவன வார்ன் பண்ணுவாங்க...
அப்பறம் ?
அச்செம்ப்ளில அன்னௌன்ஸ் பண்ணி அசிங்க படுத்துவாங்க...
அப்பறம் ..?
ஹென் .. ? அவன் ஆளு அவன கயட்டி விட்டுடுவா .. அப்பறம் நீ அவல கரெக்ட் பண்ணிக்கலாம் ...
இதெல்லாம் நடக்குமா டா.. ???
டேய் ... மனசாட்சிய தொட்டு சொல்லு.. உனக்கு வெக்கம் மானம் சூடு சொரணை.. நெஜமாவே இல்லையா..? இல்ல இல்லாத மாதிரி நடிகிறியா .. இந்த பொழப்புக்கு ... தூ... !!!!
சேரி சேரி.. கூட்டத்துல கட்டு சொத்த அவுகாத...

Scene 3 - Act 1 :-
Next Day - 12:00 AM

When aqueous solution of formaldehyde is evaporated to dryness it forms a white crystalline polymer called paraformaldehyde.
டேய்... தூக்கம் தூக்கமா வருது டா...
மச்சான்.. நீ இப்போ தூங்கினன்னு வேய் .. நாளைக்கு நீ கன்பிர்மா பெயில்
இன்னும் படிக்க எவ்ளோ டா இருக்கு ?
இன்னும் -d-Block elements படிக்கணும், Thermodynamics இருக்கு .. Bio molecules இருக்கு ... Equations Balancing பார்க்கணும்... Organic Chemistry Problems இருக்கு ... Naming Reactions இருக்கு
டேய்.. இதெல்லாம் படிச்சு முடிகறத்துகுள்ள அடுத்த போர்டு எக்சாமே வந்துடுமே ...

Scene 3 - Act 2 :-
Next Day Morning- 8:00 AM

டேய்.. டேய் டேய்... எந்துறீங்க டா ...
என் டா இப்போ எழுபர ? நான் தான் உன்ன ஆறு மணிக்கு எழுப்ப சொன்னல ..
டேய் .. மணி எட்டுதா..
எட்டா ?
சீக்கரம் சீக்கரம் ... கெளம்பு கெளம்பு ..
மச்சான்.. அர்ஜெண்டா பாத்ரூம் போனும்டா...
ஒன்னுக்கா ? ரெண்டுக்கா ?
ரெண்டுக்கு ..
டேய்...அதுகெல்லாம் இப்போ டைம் இல்ல டா..
டேய்.. இப்போ போகலனா .. அப்பறம் எக்ஸாம் ஹால்ல அசிங்கமாயிடும் ...
நாசமா போச்சு ... அந்த பரோட்டா கடைக்காரன் பொண்ண சைட் அடிசிகிட்டே, நீ பரோட்டாவ தின்னும் போதே நெனச்சேன் டா .. ஏதோ நடக்கபொகுதுனூ ... ச!!
டேய் ..டேய் .. டேய்.. கொச்சிகாத டா ... இதோ இப்போ வந்திடறேன் டா ...

Scene 3 - Act 3 :-
9:00 AM

எப்படியோ அடிச்சு பிடிச்சு ஸ்கூல் வந்தாச்சு ..
எக்ஸாம் எத்தன மணிக்கு டா ?
பத்து மணிக்காம்டா ...
நல்லதா போச்சு .. ஒரு தடவ ரிவயீஸ் பண்ணலாம் வா ...
சேரி .. De Broglie Principle நா என்ன ?
ஹ்ம்ம்... அது வந்து ... ஹ்ம்ம் தெரியல டா மச்சான்..
நாயே நாயே.. நேத்திக்கு என்னமோ செம்மையா பிட்ட போட்ட ?
மறந்து போச்சு மாமா..
சேரி சேரி.. படிச்சிட்டு என்னக்கும் சொல்லி குடு ..

9:30 AM

மாமா .. இந்த எப்டி சால்வ் பண்ணோம்னு மறந்து போச்சு டா ..
சேரி சேரி.. ஒன்னும் பிரச்சனை இல்ல.. நம்ம கார்த்திக் அங்க நிக்கறான் பாரு.. அவன் கிட்ட கேட்கலாம் டா ..
டேய்..நல்ல வேலை நீங்க வந்தீங்க டா..ஆமா Wolfe Kischner Reactionன்னா என்ன டா ? மறந்து போச்சு டா ...
நாசமா போச்சு ..

9:40 AM

மாமா ..அவனுக்கும் ஒன்னும் தெரியல டா... சும்மா சீன போடறான் ...
சேரி.. சேரி.. ஆபத்துக்கு பாவம் இல்ல... நம்ம பாஸ்கர் அங்க நிக்கறாரு .. வா.. அவர் கிட்ட பொய் கேட்கலாம் ...
டேய்.. எப்போலிருந்து அவன் அவரானாறு ..?
எல்லாம் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தான் ...
வாங்க டா .. என்ன எல்லாம் படிச்சிடீன்களா ?
இல்ல சார்... இந்த ப்ராப்ளம் எப்டி சொல்வ பண்ணனும்னு தெரியல சார் ..
இந்த ப்ராப்ளமா ?
ஆமா சார்..
டேய் .. நான் தான் இந்த ப்ராப்ளம் எக்சாம்ல வராது .. இத படிகாதீங்கன்னு ...
அப்டியா சார்... எனக்கு தெரியாது சார்...
டேய்.. நாயே நாயே... கிளாஸ்ல படிக்காம பொண்ணுங்கள பார்த்துகிட்டு இருந்தா.. இப்டி தாண்டா இருப்பீங்க... உங்கள எல்லாம் திருத்தவே முடியாது டா... சேரி சேரி.. பெல் அடிக்குது... போங்க .. பொய் எக்சாம எழுதுங்க ..

Scene 3 - Act 4 :-
01:00 PM

டேய் .. எப்டி டா எழுதின ?
சச்ச்ச்சபா ... என் டா இப்டி உயிரை வாங்கற ... எக்ஸாம் தான் எழுதியாச்சுல ? ப்ரீயா விடு ...
டேய்.. என்னடா அசால்டா சொல்லிட்டே ?
மச்சி .. நாம எக்சாம டேக் இட் ஈசீயா எடுத்துக்க கூடாது ... எக்ஸாம் ரிசல்ட தான் டேக் இட் ஈசீயா எடுத்துக்கணும் ...
என்னடா இவன் தத்துவம் எல்லாம் உதிக்கிறான் ..
புதிய தத்துவம் 4907 !!!


Scene 3 - Act 5 :-

அடுத்த நாள் ...

மச்சான் ... எல்லிப்ஸ் போர்முலா டேரிவேஷன் மறந்து போச்சுடா சொல்றியா ?
டேய் ...கடுப்பெதாத ...
இல்ல டா.. நான் ஒன்னு பண்றேன் .. நம்ம சுரேஷ கூட்டிகிட்டு ..உங்க வீட்டுக்கு வந்திடறேன் ... நம்ம குரூப் ஸ்டடி பண்ணலாம் ...

Curtain Falls.

Thursday, November 4, 2010 by Hari
Categories: , , | Leave a comment

Leave a Reply