வோட்டுகளம்

I watched Aadukalam last week and was very much impressed by it.
That being said, over the week, the story of Aadukalam kept running over and over in one corner of my mind. "You are missing something Hari." An inner voice kept saying.
And suddenly it came crashing down on me.
What an analogy~ simile ~metaphor !!!
Here is my interpretation. In Tamizh.

மொதல்ல கதை சுருக்கம்.

பேட்டைக்காரனும் ஆயுப்பும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் பழக்கம் சுமார் ஒரு முப்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.

இவர்கள் சேவல் சண்டைகளின் சண்டியர்கள். இவர்களை தோற்கடிப்பதே தனது வாழக்கையின் குறிக்கோள் என வாழ்பவன் தான் ரத்தினசாமி.

பேட்டைக்கு வலது கை துரை. இடது கை கருப்பு. உயிர் அயுப்.
இப்படி வாழ்க்கை ஓடி கொண்டு இருக்கையில், ஒரு சேவல் சண்டையில், கருப்பு தானாகவே தன் சேவலை சண்டைக்கு விட்டு (ஒரு முறை அல்ல... மூன்று முறை, ஒரே சேவலை ) பல லட்சங்களை ஜெயிச்சிடராறு . மக்கள் அவரை அடுத்தபேட்டைகாரன்னு அழைக்க ஆரம்பிக்கறாங்க...இதை பொறுத்துக்க முடியாத பேட்டைக்காரன், சூழ்ச்சி செய்யறாரு. கதை வேறு விதமாக செல்கிறது. கடைசியில் கருப்புக்குபேட்டைகாரனுடைய சுயரூபம் தெரிய வர, பேட்டைக்காரன் தற்கொலை செஞ்சிக்கராறு.

இது தாங்க கதை.. இப்போ இத வேற விதமா பார்ப்போமா ?

பேட்டைக்காரன் தான் இன்றைய தமிழக முதல்வர். ரொம்பவும் சீரும் செருப்புமா, மன்னிக்கவும் ... சிறப்புமா வாழ்ந்துட்டு இருக்காரு .

அயுப் தான் பேராசிரியர். அப்பப்போ கட்சிக்கு மருந்தா வேலை செய்யறாரு.

பார் வெச்சு நடத்தரவரு (துரை ) தான் நம்ம மதுரை தளபதி .

சொல்லவே தேவை இல்ல.... கருப்பு தான் நம்ம (அறுபது வயது ஆகியும் இன்னமும் இளைஞர் அணி தலைவரா இருக்கிற ) சிங்கார சென்னை தளபதி ...சரி .. கதைக்கு வருவோம் ... தன் மகன் தன்னையே மிஞ்சிடுவானோ என்ற பயம் பேட்டைகாரன்னுக்கு அதுனால மொதல்ல அவருடைய பதவிக்கு குறி வைக்கறாரு. மேயர் பதவி காலி.
அப்புறம், மகன் கட்சி மாறிட போகிறான் என்ற பயத்தில், தன் அருகிலேயே வைத்துகொள்ள அவரை துணை முதல்வர் ஆக்குகிறார். அதாவது டம்மி பீஸ்.

பிள்ளைக்களுக்குள் போட்டியும் பொறாமையும் வருவதற்கு, மதுரை தளபதிக்கு மந்திரி பதவி குடுக்கறாரு.

இரண்டு மகன்களும் அடித்து கொள்ளாமல் (கொல்லாமல்) வாழ்வது, பேட்டைகாரனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதுவும் சென்னை தளபதி தான் அடுத்த வாரிசு என்று பத்திரிக்கைகளும் , அரசியல் கட்சிகளும், தொலைகாட்சிகளும் பேசி கொள்வது, அவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. எங்கே தனது மகன் தன்னையே மிஞ்சிடுவானோ என்கிற ஒரு பொறாமை. அதுனாலையோ என்னவோ
மனுஷன் இன்னமும் பதவி வெறி பிடித்து உட்காறந்திருகிறார்.

அடுத்த பேட்டைக்காரன் யாரு என்ற இந்த சண்டை ஓடி கொண்டு இருக்க... வந்தார் களத்தில் ராஜா (படத்துல இவர் இல்லீங்க.. ஆனா இந்த படத்துல, ஒரு ஸ்பெஷல் என்ட்ரி.) ராஜா பக்கம் சாய்ந்தால் எல்லோருக்கும் கொடஞ்சல். மகன்களால் தலையை வெளில காட்டிக்க முடியாது. அவமானம். அவர்களுக்கு. தனக்கு ? தனக்கு தன்மானம் , ரோஷம், வெக்கம், சூடு, சொரணை, இப்படி எதுவுமே இல்லையே... அப்பறம் எதற்கு அவர் கவலை பட வேண்டும்...யாராவது கேட்டால், ராஜா கட்சிக்காக உழைத்திருக்கிறார். அவர் ஒரு தியாகின்னு பிட்டு போட வேண்டியது தான்.

இது தான் இன்றைய தமிழகத்தின் நிலை ...
சென்னைக்கும் மதுரைக்கும் போர் வெடிக்குமா ...
இல்லை இரண்டு மகன்களும், நாட்டின் நன்மைக்காக, ஏதாவது முடிவு எடுப்பார்களா?

பொறுத்திருந்து பார்ப்போம் ! ...

Thursday, February 10, 2011 by Hari
Categories: , , , , , , | Leave a comment

Leave a Reply